சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனுஷ்கா!

சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் சைரா நரசிம்மா ரெட்டி படம் அக்டோபர் 2ம் தேதி ரிலீசாகிறது. சுதந்திர போராட்ட வீரரின் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. இதில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். அதேபோல் விஜய் சேதுபதியும் குறிப்பிட்ட கேரக்டரில் நடித்திருக்கிறார். சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் இந்த படத்தில் கவுரவ வேடத்தில் அனுஷ்கா வருகிறார். படத்தின் கதைப்படி அவர் ஜான்சி ராணி கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் சைராவுக்கு உதவும் வகையில் ஜான்சி ராணியின் வேடம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சிரஞ்சீவிக்கு உதவும் வேடத்தில் அனுஷ்கா வருகிறாராம்.