சைரா நரசிம்மா ரெட்டி’ படத்திற்கு ராஜமௌலியிடம் ஆலோசனை கேட்க சிரஞ்சீவி முடிவு !

‘சைரா நரசிம்மா ரெட்டி’. அவருடைய மகன் ராம் சரண் இப்படத்தை தயாரிக்க சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிரஞ்சீவியின் கனவு படமான இந்த படம் கண்டிப்பாக வெற்றியடைந்தே தீர வேண்டும் என்று ஒரு முடிவாக இருக்கிறாராம். படம் நன்றாக வந்திருந்தும், படத்தின் நீளம் சிறிது தயக்கத்தை கொடுத்திருக்கிறதாம் இதனால் பிரியட் படங்களை எடுத்து கைதேர்ந்தவராரன ராஜமௌலிக்கு படத்தை போட்டு காட்டி அவரை வைத்து எடிட் செய்ய காத்திருக்கிறாராம் சிரஞ்சீவி. முன்னதாக சாஹோ படம் ரிலீஸாகுவதற்கு முன்பு அந்த படத்தை பார்த்த ராஜமௌலி படத்தின் நீளம் உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக வரும் அதனால் படத்தின் நீளத்தை குறைக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார். ஆனாலும் படக்குழு அப்படியே படத்தை ரிலீஸ் செய்துள்ளது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் ராஜமௌலி சொல்லியதை செய்திருக்கலாம் என்று தற்போது யோசிக்கிறதாம் படக்குழு. இதை தெரிந்துதான் சிரஞ்சீவி ராஜமௌலியை அழைத்து எடிட் செய்ய தேதிகள் கேட்டிருக்கிறாராம்.