சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் தமிழ் பதிப்பில் சிரஞ்சீவிக்கு குரல் கொடுக்கிறார் அரவிந்தசாமி !

பாகுபலிக்குப் பின் தெலுங்கிலிருந்து அதிக பட்ஜெட்டில், அதாவது சுமார் 240 கோடியில் உருவாகிவரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என ஒரே சமயத்தில் நான்கு மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. இப்படத்தில் சைரா நரசிம்ம ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்துள்ளார். நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் தமிழ் டப்பிங்கில் நாயகன் சிரஞ்சீவிக்கு தமிழில் குரல் கொடுக்க அரவிந்த் சாமி ஒப்பந்தமாகியுள்ளார்.