‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் புதிய தோற்றத்தில்- நடிகர் விஜய் சேதுபதி!

தாதா, திருடன், டாக்டர், போலீஸ் அதிகாரி உள்பட அழுத்தமான வேடங்களில் நடித்துள்ளார். சீதக்காதி படத்தில் 80 வயதுள்ள நாடக நடிகராக வந்தார். கடந்த வாரம் வெளியான ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற பெயரில் திருநங்கையாக நடித்து வருகிறார். சமந்தா, பஹத் பாசில் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர்.தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற சரித்திர படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்து வருகிறார். இதில் சிரஞ்சீவி மன்னராகவும், விஜய் சேதுபதி அவரது மெய்க்காப்பாளராகவும், நயன்தாரா ராணியாக நடிக்கிறார். விஜய் சேதுபதியின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது விஜய் சேதுபதிக்கு முதல் தெலுங்கு படம். அடுத்து மலையாள படமொன்றிலும் நடிக்கிறார்.