சௌந்தர்யா ரஜினிகாந்தின் 2 -வது திருமணம் – பிப்ரவரி., 11 – ஆம் தேதி

சௌந்தர்யா ரஜினிகாந்தின் 2 -வது திருமணம் வருகிற பிப்ரவரி 11 – ஆம் தேதி நடக்கவிருக்கிறது. சௌந்தர்யா இயக்குனர், தயாரிப்பாளர், கிராபிக் டிசைனர் என சினிமாவில் தன் பங்களிப்பை தந்தவர். இவருக்கும் சென்னை தொழிலதிபர் அஷ்வினுக்கும் கடந்த 2010 -ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்களுக்கு வேத் என்ற மகனும் உண்டு, இதற்கிடையே இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு பரஸ்பர விவாகரத்து பெற்றனர். சௌந்தர்யாவுக்கும் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது. விசாகன் அமெரிக்காவில் படித்தவர் 'வஞ்சகர் உலகம்' என்ற தமிழ் படத்திலும் நடித்தவர். படத்தயாரிப்பு நிறுவனமும் நடத்திவருகிறார். ஐவரும் திருமணமாகி விவகாரத்தானவர் என தெரியவருகிறது. இவர்கள் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடக்கிறது. அண்மையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் திருப்பதியில் நடந்தது. வருகிற பிப்ரவரி 11 – ஆம் தேதி ஞாயிற்றுகிழமை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் எளிமையாக நடக்கவுள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.