ஜக்கி வாசுதேவின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்திற்கு குரல் கொடுக்கும் நடிகைகள் !

‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தின் 2-வது களப்பணியாக தென்னிந்தியாவின் உயிர் நாடியாக விளங்கும் காவிரியை மீட்பதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ‘ஈஷா’ அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார். இந்த இயக்கம் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காவிரி வடிநில பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இயக்கத்திற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகைகள் கங்கனா ரணாவத், தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.