ஜக்கி வாசுதேவுடன் இணைந்து காவிரி கூக்குரல் இயக்கத்துக்கு ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி காப்ரியோ ஆதரவு !

டைட்டானிக்’, ‘தி ஏவியேட்டர்’, ‘தி ரெவனன்ட்’, ‘ஷட்டர் ஐலேண்ட்’, ‘ஐஸ் ஆன் பயர்’ உள்ளிட்ட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்தவர், லியானர்டோ டி காப்ரியோ. இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில், சென்னையில் நிலவும் குடிநீர் பஞ்சம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு, ‘மழையால் மட்டுமே சென்னையைக் காப்பாற்ற முடியும் என கவலையுடன் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் காவிரி நதியை காப்பாற்றி புத்துயிர் அளிக்கும் வகையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கி இருக்கும் ‘காவிரி கூக்குரல்’ இயக்கத்துக்கு நடிகர் லியானர்டோ டி காப்ரியோ ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்திய நதிகள் கடுமையாக அருகி வரும் வேளையில் அதன் பல சிறு நதிகள் மறைந்து போயிருக்கிறது. இந்த நேரத்தில் காவிரி நதிக்கு புத்துயிர் அளிக்க ’காவிரி கூக்குரல்’ இயக்கம் தொடங்கி இருக்கும் ஜக்கி வாசுதேவுடன் நாம் இணைவோம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.