ஜனவரியில் வெளியான படங்கள்: திரையரங்கில் வசூலா? இல்லையா?
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரி 5ம் தேதி “காவாலி, டிசம்பர் 13, ஓநாய்கள் ஜாக்கிரதை, பார்க்க தோணுதே, சாவி, விதி, மதி உல்டா” ஆகிய படங்கள் வெளியானது. ஆனால் இந்த படங்கள் மக்களிடம் சரியாக சென்றடையவில்லை. இதில் சில படங்கள் முதல் வாரம் ஓடியது.மற்ற படங்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.ஒரு நாளாவது திரையரங்கில் ஓடிருந்தால் அதுவே அந்த படங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றிதான். ஜனவரி 12 தேதி “குலேபகாவலி, ஸ்கெட்ச், தானா சேர்ந்த கூட்டம்” ஆகிய மூன்று படங்கள் வெளியானது. இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் படம் 25 நாட்களைக் கடந்துவிட்டது என மகிழிச்சியுடன் விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர். ஆனால் படங்களை வாங்கி திரையிட்டவர்கள் அந்த மகிழ்ச்சி இல்லை என்று கூறுகிறார்கள்.இந்த படங்களின் மீது கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இந்த படங்கள் மிக பெரிய வெற்றியை பெற்றிருக்கும். ஜனவரி 19 தேதி “வீரத் தேவன்” புதுமுகங்கள் அறிமுகமான படம். இந்த வாய்ப்பை இந்த புதுமுகங்கள் அழுத்தமாக அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை.இந்த ஆண்டிலும் இது தொடரும் போல் இருக்கிறது. ஜனவரி 26 தேதி “நிமிர்,மன்னர் வகையறா,சரணாலயம்,” ஆகிய படங்கள் வெளியானது. நிமிர் படம் முதல் நாளே ஓடவில்லை. மன்னர் வகையறா படத்தை சுருக்கி இருந்தால் வசூலாகி இருக்கும். சரணாலயம் இப்படி ஒரு படம் வெளியானதா என்றே பலர் கேட்கிறார்கள். ஆனால் அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் டப்பிங் செய்து வெளிவந்த பாகமதி வசூலை அள்ளியது. அதே போல் ஹிந்தி டப்பிங்கான பத்மாவத் சர்ச்சையுடன் வெளியானாலும் வசூலை தந்திருந்தது. தமிழில் உருவான படங்களை காட்டிலும் இந்த இரு படங்கள் நல்ல வசூலை தந்ததாக திரையரங்கு வட்டாரம் தெரிவித்துள்ளது. இனி வரும் படங்களாவது முத்திரை பதிக்கும் அளவில் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.