ஜனவரி 26-ல் விக்ரமின் புதிய படம் ஆரம்பம்

விக்ரம் இருமுகன் படத்தை அடுத்து, தற்போது கெளதம்மேனன்,விஜயசந்தர் இயக்கும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க திட்டமிட்டிருப்பவர், முதலில் விஜயசந்தர் இயக்கும் படத்தை தொடங்கி, பிப்ரவரியில் கெளதம்மேனனுக்கும் கால்சீட் கொடுத்துள்ளார்.

இந்த இரண்டு படங்களிலும் மாறி மாறி நடிக்கும் விக்ரம், விஜயசந்தர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் ஜனவரி 26-ந்தேதி கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் நாயகியாக மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார்.