ஜப்பான் மொழிகளில் ரிலீஸாகும் டிஜிட்டல் ‛பாட்ஷா’

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சில காவிய படைப்புகளுக்கு இருக்கும் வரவேற்பும், அங்கீகாரமும் குறையவே குறையாது, அப்படிப்பட்ட படங்களில் ரஜினியின் ‛பாட்ஷா' படமும் ஒன்று.சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், சத்யா மூவிஸ் தயாரிப்பில் வெளிவந்த இப்படம், தற்போது நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றி, 5.1 டிஜிட்டல் ஒலி-ஒளி அமைப்பில் வெளியாக உள்ளது.

இந்த நவீன தொழில் நுட்பத்தில் மெருகேறிய பாட்ஷா படத்தின் டிரைலர், கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகி, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து  முன்னிலை வகித்து வந்தது.ஜப்பான் நாட்டு ரசிகர்களும் இந்த டிரைலருக்கு அளித்த ஆதரவை வெறும் வார்த்தைகளால் சொல்ல இயலாது. சென்னையில் நடைபெற இருக்கும் பிரத்யேக காட்சிக்கு ஜப்பான் ரசிகர்கள் வரவுள்ளனர்.அதுமட்டுமின்றி,தற்போது படத்தின் வசனங்களை  ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கும் (ஷ்ஊBட்ஈட்Lஏ)  பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஸ்வீடன் மற்றும் இன்னும் சில நாடுகளில் இருந்தும் எங்களின் டிஜிட்டல் பாட்ஷாவிற்கு, வர்த்தக ரீதியாக நல்லதொரு வரவேற்பு கிடைத்து வருகிறது” என்று சத்யா மூவிஸ் கூறியுள்ளனர்.