ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் இளைகர்களின் எழுச்சி போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அலங்காநல்லூரில் கைதானவர்களை விடுவிக்க கோரியும் இன்று காலை  இளைஞர்களால் தொடங்கப்பட்ட மெரினா போராட்டம் நேரம் ஆக ஆக தற்போது மெரீனா கடற்கரை சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்படும் அளவுக்கு கூட்டம் பெருகி உள்ளது.குறிப்பாக எந்த அரசியல் கட்சி தலைவர்களையும் நெருங்க விடாமல் முழுக்க முழுக்க தமிழ் உணர்வோடு இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.மேலும் இளைஞர்களை சந்திக்க அவ்வப்போது திரையுலகினர்கள் வந்து வாழ்த்து தெரிவித்து செல்கின்றனர்.

இந்த​ போராட்டத்தில் இளைகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் முதல்வர் பன்னீர் செல்வம் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும் என்றும் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.