ஜான்விக்கும் இஷான் கட்டாருக்கும் காதலெதுவுமில்லை – போனி கபூர் விளக்கம் !

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி தடக் படம் மூலம் நடிகையானார். அந்த படத்தின் ஹீரோவான இஷான் கட்டாரும் (நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி), ஜான்வியும் காதலிப்பதாக பேசப்படுகிறது. இதற்கு விளக்கம் அளித்த போனிகபூர், இஷானும், ஜான்வியும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தார்கள். அதனால் அவர்கள் நண்பர்களாகியிருக்கக்கூடும். நான் என் மகளையும், அவர் இஷானுடன் நட்பில் இருப்பதையும் மதிக்கிறேன் அவர்களுக்கு இடையே நட்பை தாண்டி எதுவும் இல்லை என்று போனி கபூர் தெரிவித்துள்ளார். ஜான்வி ரூஹிஹப்சா படத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்காக அவர் தனது உடல் எடையை 10 கிலோ குறைத்தார். இந்நிலையில் கார்கில் கேர்ள் படத்தில் நடிப்பதற்காக தனது எடையை அதிகரிக்கப் போகிறாராம் ஜான்வி. அம்மா ஸ்ரீதேவி, அக்கா ஜான்வி வழியில் குஷி கபூரும் நடிகையாகப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.