ஜான்வி ஹிந்தியில் தாயின் இடத்தை பிடிப்பாரா?

ஸ்ரீ தேவியின் மறைவிற்கு பிறகு அவரது மூத்த மகள்  ஜான்வி மீது திரையுலகைச் சேர்ந்த அனைவரது கவனமும் அழுத்தமாக பதிந்துள்ளது. இவர் தற்போது 2016ம் ஆண்டு மராத்தி மொழியில் சூப்பர் ஹிட் கொடுத்த “சைரட்” படத்தை ஹிந்தியில் “ரீ மேக்” செய்து “தடாக்” என்ற  படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜூலை மாதத்தில் வெளியாக உள்ளது. அதற்குள் ஸ்ரீ தேவி இறந்துவிட்டார். மறைந்த நடிகை ஸ்ரீ தேவி, இந்த படத்தில் நடிப்பதற்கு அழைத்த போது சற்றும் யோசிக்காமல் தனது மகள் நடிப்பார் என்று கூறியுள்ளார். ஜான்விக்கு  ஜோடியாக பிரபல நடிகர் ஷாகித் கபூரின் தம்பி, இஷாந்த் நடிக்கிறார்.ஹிந்தியில்  அம்மாவின் இடத்தை ஜான்வி பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளார்.