ஜி.வி.பிரகாஷை பாராட்டிய சூர்யா

செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரித்து நடிக்க உள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அனைத்து பாடல்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார். தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் கதை மற்றும் பாடல்கள் என அனைத்தையும் கேட்ட சூர்யா, ஜி.வி.பிரகாசை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவருக்கு ஒரு பெரிய பூங்கொத்து கொடுத்து அனுப்பி அதில் “ஜிவி ப்ரோ, பாடல் கேட்டு சிலிர்த்துவிட்டேன். அட்டகாசமான பாடல்கள்” என்று தன் கைப்பட எழுதியிருக்கிறார். இதனை புகைப்படம் எடுத்து ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.