ஜி.வி.பிரகாஷ்:”நாச்சியார்” படத்தால் கிடைத்த வெற்றி…

பாலா இயக்கிய “நாச்சியார்” படம் வெற்றியை தொடர்ந்து இரண்டு விதமான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதை செயற்கை கதை என்றும்,ஆகச் சிறந்தத் திரைப்படம் என சிலர் குறி வருகின்றனர். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் அவர் ” திரையுலகில் இசையமைப்பாளராக வலம்வந்து கொண்டிருந்த எனக்கு நாயகன் என்ற அடையாளத்தை கொடுத்து ஆக்கமும், ஊக்கமும் கொடுத்த அனைவர்க்கும், மற்றும் நாச்சியார் படத்திற்கு அமோக  ஆதரவு அளித்து நல்ல வரவேற்பு கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றி என்றும், இந்த படத்தை விமர்சகர்களிடமும், மக்களிடமும்,திரையுலக பிரமுகர்களிடமும் எனக்கு நல்ல பெயர் பெற்று தந்துள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த படத்திற்காக என்னை அணுகிய போது இசையமைக்கத்தான் அழைக்கிறார்கள் என்று நினைத்தேன். பாலா சார் “நீ தான் நடிக்கிற ” என்று சொன்ன போது எனக்கு கிடைத்த சந்தோசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்த படத்தை பார்த்த  அனைவரும் “நல்ல நடிகன்”  என்று கூறினார்கள். இதற்கு பாலா சாருக்கும், ஜோதிகா மேடம், இவானா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். இதில் இளையராஜா சாருடைய இசையில் நடித்தது, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு என ஒவ்வொருவருமே படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைத்தது என கூறியுள்ளார். இந்த படத்தில் ஜோதிகா உதவி கமிஷனர் ஆக திமிர் பிடித்த பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அதிலும் துணை கமிஷனரை போடி என அவர் சொல்லிவிட்டு செல்லும் காட்சியில்  தியேட்டர்களில் கைதட்டல் பிளக்கிறது.