ஜீவா, அருள்நிதி இணைந்து மிரட்டும் களத்தில் சந்திப்போம்

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் 90வது படம், களத்தில் சந்திப்போம். முதல்முறையாக ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கின்றனர். மற்றும் மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர், ராதாரவி, ரோபோ சங்கர், பாலசரவணன், இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேல.ராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ், பெனிடோ, பிசாசு ஹீரோயின் பிரக்யா மார்ட்டின் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, அபிநந்தன் ராமானுஜம். இசை, யுவன்சங்கர்ராஜா. பாடல்கள்: பா.விஜய், விவேகா. வசனம். ஆர்.அசோக். இயக்கம், என்.ராஜசேகர். 1990ல் புது வசந்தம் மூலம் தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி, தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 89 படங்கள் தயாரித்துள்ளார்.