Cine Bits
ஜெயம் ரவி ஜோடியாகும் நித்தி அகர்வால் !

ரோமியோ ஜூலியட், போகன் படங்களை தொடர்ந்து லட்சுமணன் ஜெயம் ரவி மீண்டும் இணைந்துள்ளனர். முந்தைய 2 படங்களிலுமே ஜெயம் ரவி ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். ஆனால், இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜெயம் ரவியின் 25-வது படமாக இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தனது ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார்.