ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவுக்கு ரூ.24 கோடி சம்பளம்!

விஜய் இயக்கும் படத்திற்கு ‘தலைவி’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இதில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் ஒப்பந்தமாகி உள்ளார். இதுபற்றி இயக்குனர் விஜய் கூறும்போது, இந்தியாவின் முக்கியமான தலைவரான ஜெயலலிதாவின் வாழ்க்கையை தலைவி என்ற பெயரில் படமாக்குவது பெருமையாக இருக்கிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிப்பது மேலும் சிறப்பானது என்றார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசி இருப்பதாக இந்தி இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய படத்தில் நடிக்க எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை. படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்கவிருக்கிறது.