ஜெயலலிதாவை தொடர்ந்து கண்ணகியாக நடிக்க போகும் கங்கனா !

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். தலைவி படத்தை ஜூன் 26-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தலைவி படம் வெற்றி அடைந்தால், இயக்குனர் ஏ.எல்.விஜய் மீண்டும் ஒரு பயோபிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது கண்ணகியின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை என்றும், அதிலும் கங்கனா ரனாவத்தையே ஹீரோயினாக நடிக்க வைக்க ஏ.எல்.விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.