ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க நோ சொன்ன மஞ்சிமா மோகன் !

ஜெயலலிதா பற்றிய வெப்சீரிஸில் நடிக்க கவுதம் கூப்பிட்டார். ஆனால் வெப்சீரிஸில் நடிக்க விருப்பம் இல்லாததால் நோ சொல்லி விட்டேன். ஒரு நடிகையாக எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அந்த வகையில் சசிகலா கதாபாத்திரத்திலும் நடிக்க நான் தயார். இந்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன். இதில் நடிக்க மாட்டேன் என எந்த வரையறையும் எனக்கு கிடையாது. சினிமாவில் நான் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என நினைக்கிறேன் இவ்வாறு மஞ்சிமா மோகன் கூறினார்.