ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க 20 கோடி சம்பளம் கேட்கும் கங்கண ரணாவத் !

இதில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்தை தேர்வு செய்துள்ளனர். அவரும் கதாபாத்திரத்துக்காக பரதநாட்டியம் மற்றும் தமிழ் கற்று வருகிறார். படத்துக்கு தலைவி என்று பெயர் வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. இந்தி பதிப்புக்கு ஜெயா என்று தலைப்பு வைத்தனர். ஆனால் கங்கனா ராணாவத் தலைவி என்ற பெயரையே இந்தி பதிப்புக்கும் வைக்கும்படி கேட்டுக்கொண்டதால் அது ஏற்கப்பட்டு உள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன் தலைவி படத்தை 3 மொழிகளிலும் எடுக்க ரூ.55 கோடி பட்ஜெட் நிர்ணயித்து உள்ளனர். ஆனால் கங்கனா ரணாவத் ரூ.20 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இந்த பிரச்சினைகளால் தலைவி படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.