ஜெயலலிதா மரணம் குறித்து – கமல் கருத்து

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே சமூக விழிப்புணர்ச்சியையும், ஒரு குடிமகனாக தனக்குள் எழும் உணர்ச்சியையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். இந்த கருத்துக்கள் மக்களிடையே பெரும் வரவேற்பையும் ஒருசில அரசியல்வாதிகளுக்கு வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல் பேட்டி அளித்தார். இதில் அவர் தனது பாணியில் பல பரபரப்பு கருத்துக்களை கூறினார்.அப்போது ஜெயலலிதாவின் மரணம் குறித்து அவர் பேசியதாவது.

முன்னாள் முதல்வர் 'ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படாமல் ஜெயலலிதா இருந்ததால் இந்த சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டிக் கேட்க மக்கள் தயாராக வேண்டும் என்று கூறிய கமல், அதே நேரம் வாக்குகளை விலை பேசுபவர்களால் தட்டிக்கேட்க முடியாது என்றும் அவர் கூறினார்.