ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் தற்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகர் சமுத்திரக்கனி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த செய்தியை அவரே உறுதிப்படுத்தியும் இருக்கிறார். இதுகுறித்து நடிகர் சமுத்திரக்கனி, ‘ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்கும் ஏ.எல்.விஜய், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க என்னிடம் கேட்டார். நானும் சம்மதம் தெரிவித்துவிட்டேன். ஆனால், அது எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது சர்ப்ரைஸ். ஜெயலிலதாவின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியில் ஏ.எல்.விஜய் தவிர, இயக்குநர் பாரதிராஜா மற்றும் பிரியதர்ஷினி ஈடுபட்டுள்ளார்.