ஜெர்சி ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு அமலா பால்

கௌதம் தின்னானூரி இயக்கத்தில், தெலுங்கில் ஹிட் அடித்த திரைப்படம் ,'ஜெர்சி'. நானி ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில், ஹீரோயினாக நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடித்திருந்தார். படத்தின் முக்கியமான ரோலில் நடிகர் சத்யராஜ் மற்றும் ஹரீஷ் கல்யாண் நடித்திருந்தனர். இந்நிலையில், இப்படம் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது. தெலுங்கு நடிகர் ராணா தயாரிக்க இருக்கும் இப்படத்தை 'ஒருநாள் கூத்து', 'மான்ஸ்டர்' உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். படத்தின் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். தற்போது, இப்படத்தில் ஹீரோயின் ரோலில் அமலா பால் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. ஏற்கெனவே, இவர்கள் இருவரும் 'ராட்சசன்' படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஷூட்டிங் ஆரம்பமாகும் எனவும் கூறப்பட்டு வருகிறது.