ஜோதிகாவின் எலிகென்ட் லுக் !

அஜ்ரக் முறையில் செய்யப்பட்ட ப்ரின்டிங்குடன், சாட்டின் போன்றிருக்கும் `மொடால்' மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்ட இந்த வித்தியாசமான `தோதி' ஸ்டைல் டிரெஸ்ஸில், `குஷி' லுக் பப்ளி ஜோதிகாவை நினைவுபடுத்தினார். முழுக்க முழுக்க ஜியார்ஜெட் மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்ட அந்த வெள்ளை நிற தோதி புடவையில், சிக்கன்காரி மற்றும் ஃபாயில் ப்ரின்ட் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதற்குப் பொருத்தமாக, ஆன்டிக் கோல்டு நெக்லஸ் மற்றும் கோல்டன் நிற வாட்ச் என கலக்கலாகத் தோற்றமளித்த ஜோதிகா, இம்முறையும் கம்மலுக்கு `தடா' போட்டிருந்தார். தற்போது, மீண்டும் தன்னுடைய `தோதி' காதலைச் சொல்லும் விதமாக கார்த்தியுடன் கலந்துகொண்ட பிரஸ் மீட்டில், `தோதி' புடவைக்கு பதில் சற்று மாறுதலாக `தோதி' டிரெஸ் அணிந்து, பழைய `பப்ளி பியூட்டியாக' வளம் வருகிறார். இனி… `தோதி டிரெஸ் அணிந்து வந்த சொர்க்கமே' என்று பாடுவாரோ சூர்யா