ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ ரிலீஸ் தேதி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா திருமணத்திற்கு பின்பு நடிக்கவில்லை,பின்னர் 2015ஆம் ஆண்டு வெளிவந்த '36 வயதினிலேயே' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார். இந்த படம் கொடுத்த மாபெரும் வெற்றியை அடுத்து நல்ல கேரக்டர் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் 'குற்றம் கடிதல்' இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் 'மகளிர் மட்டும்' என்ற படத்தில் ஜோதிகா நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என்றும் சரியான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.