ஜோதிகாவுக்கும், கார்த்திக்கும் சூர்யா வாழ்த்து !

கார்த்தியும், ஜோதிகாவும் புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இதில் இருவரும் அக்காள் தம்பியாக வருகிறார்கள். தனது அண்ணன் சூர்யாவின் மனைவியான ஜோதிகாவுடன் கார்த்தி முதல் தடவையாக சேர்ந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். ஜித்து ஜோசப் டைரக்டு செய்கிறார். படத்தை ஜோதிகாவின் தம்பி சூரஜ் தயாரிக்கிறார். படப்பிடிப்பு கோவாவில் பூஜையுடன் தொடங்கியது. அங்கு 45 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். படம் பற்றி சூர்யா படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் இது ஒரு சிறப்பான தருணம். உன்னையும் ஜோதிகாவையும் திரையில் ஒன்றாக பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.