ஜோதிகா: சம்பளம் உயர்வு….

நடிகை ஜோதிகா “நாச்சியார்” படத்தை தொடர்ந்து “செக்க சிவந்த வானம்” படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இந்திப் படமான 'தும்ஹாரி சுலு' தமிழில் ரீமேக் செய்து “உங்கள் ஜோ” தலைப்பில் ராதாமோகன் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் இவர் நடிக்க உள்ளார். சுலோச்சனா என்ற குடும்பத் தலைவியான வித்யா பாலன், எப்.எம்.ரேடியோவில் ரேடியோ ஜாக்கியாகிறார். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கிறார். நாச்சியார் படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டதால் அவரின் சம்பளமும் அடுத்தடுத்த படங்களில் உயந்து வருகிறது.