டபுள் சந்தோசத்தில் கவண் படக்குழுவினர்

விஜய்சேதுபதி நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இன்றைய ஓப்பனிங் வசூல் பிரமாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 'கவண்' படக்குழுவினர் உற்சாகமாக இருக்கும் நிலையில் டபுள் சந்தோசமாக​ இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைத்துள்ளது. இந்த தகவல் படகுழுவினர்களை மட்டுமின்றி விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரையும் சந்தோசத்தில் மூழ்கடித்துள்ளது.