டான்ஸ் என்றால் எனக்கு உயிர் – லட்சுமி மேனன் !

டான்ஸ் என்றால் எனக்கு உயிர் என்று கூட சொல்லலாம். ஏன்னா, மூன்று வயதில் இருந்து நான் டான்ஸ் கற்றுக்கொண்டு இருக்கிறேன். கிடைத்துள்ள இந்த இடைவெளியில் குச்சுப்புடி நடனத்தில் டிப்ளாமோ படித்து வருகிறேன். கூடவே, சோசியாலஜி டிகிரியை தனியாரில் படித்து வருகிறேன். ஏற்கனவே பரத நாட்டியத்துக்கு ஒரு கோர்ஸ் படித்தேன். குச்சுப்புடி டான்சில் எனக்கு இது 2-வது கோர்ஸ். 'யங் மங் சங்’ படம் முடிஞ்சு ரொம்பநாள் ஆகிவிட்டது. அதனால், சீக்கிரமே ரிலீசாகும் என்று நினைக்கிறேன். அடுத்து, 2 தமிழ்ப் படத்துல நடிக்க கதை கேட்டு வைத்துள்ளேன். முடிவானதும் சொல்கிறேன். நான் எங்கே இருந்தாலும், எப்படி இருந்தாலும் மகிழ்ச்சியாகதான் இருப்பேன். எனக்குக் கிடைத்துள்ள இந்த இடைவெளியை சந்தோ‌ஷமாக கழிக்கிறேன். வாழ்க்கை என்ன கொடுக்குதோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்கிற மனநிலை எனக்கு இருக்கு. ஏற்ற இறக்கங்கள் கொண்டதுதானே வாழ்க்கை அது எனக்குப் புரியும்.