டாப்சி படத்தை கைப்பற்றியஅனுராக் காஷ்யப் !

இறுதி சுற்று, விக்ரம் வேதா, தமிழ்படம் 2 வெற்றிகளை தொடர்ந்து ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து `கேம் ஓவர்' என்ற படத்தை தயாரித்துள்ளனர். பாலிவுட் சென்று பிரபலமாகி இருக்கும் டாப்சி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார். தமிழ், தெலுங்கில் என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் டாப்சி வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் இயக்குநரும், இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவருமான அனுராக் காஷ்யப் கைப்பற்றியிருக்கிறார்.