டார்லிங் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு பேய் படத்தில் நடிக்கும் G.V.பிரகாஷ் !

G.V.பிரகாஷ் நடிப்பில் முதலில் வெளிவந்த படம் டார்லிங் காமெடி கலந்த பேய் படம். மாபெரும் வெற்றியடைந்த இப்படத்திற்கு பிறகு வேறெந்த திகில் படத்திலும் G.V.பிரகாஷ் நடிக்கவில்லை. ஆனால் தற்சமயம் எழில் இயக்கத்தில் ஆயிரம் ஜென்மங்கள் என்னும் திகில் படத்தில் நடிக்கிறார். காதல் செண்டிமெண்ட் என படங்களை இயங்கிவந்த டைரக்டர் எழில் தற்பொழு பேய் படங்கள் வெற்றியடைவதால் அம்மாதிரி படங்களை இயக்கவுள்ளார். G.V.பிரகாஷ் ஜோடியாக இஷா ரெப்பா, நிகிஷா படேல், சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு யு. கே. செந்தில்குமார், சி.சத்யா இசையமைக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில்  ரமேஷ் பிள்ளை தயாரிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.