டிசம்பரில் தொடங்குகிறது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு !

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். அனைத்து மொழிகளில் இருந்தும் நடிகர்-நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். பொன்னியின் செல்வனில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பட்டியலை விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர். இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இப்படத்திற்கு வைரமுத்து பாடல்களை எழுதவுள்ளார். மேலும் இந்த படத்திற்காக வைரமுத்து 12 பாடல்கள் எழுதவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ரவிவர்மன் ஒளிப்பதிவில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.