டிஜிட்டல் களத்தில் நடிப்பது ரசிக்கும்படியாக உள்ளது நித்யா மேனன்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை சரித்திர படமாக உருவாகும், ‘தி ஐயர்ன் லேடி’ படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் நித்யா மேனன். அதற்கான கெட்டப் உள்ளிட்ட பணிகளில் அவர் ஏற்கனவே ஈடுபட்டிருக்கிறார். தவிர தமிழில், சைக்கோ இந்தியில் மிஷன் மங்கள் உள்ளிட்ட 4 படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நெட்டில் வெளியாகும் டிஜிட்டல் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். மாதவன் நடித்து டிஜிட்டலில் ஒளிபரப்பான ப்ரீத் கதையின் 2ம் பாகத்தில் நடிக்க வேண்டும் என்று நித்யாவை பட தரப்பு கேட்டனர் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவர்களது ஆசைப்படி ப்ரீத் 2ம் பாகம் தொடங்கப்படுகிறது. இதில் நடிப்பதுபற்றி நித்யாமேனன் கூறும்போது,’ முதல்பாகத்தில், மாதவன் நடித்த காட்சிகளை நான் பார்த்திருக்கிறேன். அதன் 2ம் பாகத்தில் நான் நடிக்கவிருப்பது த்ரில்லிங்காக உணர்கிறேன். டிஜிட்டல் களமென்றால் அதுவும் ஜாலிதான். இதுவரை நான் நடித்த நடிப்பில் இதில் எனது நடிப்பு மிகவும் ரசிக்கும்படியாக அமையும். உங்களைப்போல் நானும் அதை காண காத்திருக்கிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.