டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் “ஆளவந்தான்”

2001 ல் வெளியான சுரேஷ் க்ரிஸ்ஸனால் இயக்கிய நடிகர் கமல்ஹாசனின் விமர்சனத்தில் புகழ்பெற்ற படம் ஆளவந்தான். தயாரிப்பாளர் தாணு தயாரித்தார். கமலுடன், ரவீனா டண்டன், மனீஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், கிட்டி இவர்களுடன் தெலுங்கு மற்றும் இந்தி நடிகர், நடிகைகளும் நடித்திருந்தார்கள். சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இந்தி இசை அமைப்பாளர்கள் சங்கர், ஈஷான், லாய் இசை அமைத்திருந்தார்கள். திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். அப்போதே 600 தியேட்டர்களில் வெளியான படம்.

ஆளவந்தான் படத்தை மீண்டும் வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு முடிவு செய்திருக்கிறார். படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றி 500 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். ஆளவந்தான் படத்தின் நீளம் கருதி அப்போது பெரிய பட்ஜெட்டில் உருவான பல சண்டை காட்சிகள் வெட்டப்பட்டது. அந்த காட்சிகளையும் இணைத்து படத்தை வெளியிடுகிறார்.