டிப்ஸ் கேட்ட ஊழியர், தர மறுத்த அஜித்- ஆனால் வேறொன்று செய்தார் அது தான் தல !

அஜித்துடன் பணியாற்றிய பலரும் அவரை பற்றி புகழ்ந்து தான் பேசி வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி வரும் இயக்குனர் எச்.வினோத் அஜித் குறித்த பல்வேறு விஷயங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், சமீபத்தில் எனக்கு தெரிந்தவரை சந்தித்த போது அவர் எனக்கு ஒரு விஷத்தை சொன்னார். ஒரு முறை அவரது வீட்டில் போன் வேலை செய்யாமல் போனதற்கு அதை பழுது செய்ய டெலிபோன் டிபார்ட்மெண்டில் இருந்து ஒரு ஊழியர் வந்துள்ளார். அஜித் சாரோட இருந்து வீடு என்று தெரிந்ததும் அந்த நபர் ‘எதாவது கவனிங்க’ னு சொல்லி இருக்கார். இதை கேள்விபட்டு அந்த நபரை அழைத்து அஜித், முதலில் அவரது குடும்பம் பற்றி விசாரித்துஉள்ளர், பிறகு அவரிடம் உங்களுக்கு அரசாங்கம் பணம் கொடுக்கறாங்க இல்ல அப்புறம் ஏன் பணம் கேக்குறீங்க. உங்க வேலைய சரியா பண்ணுங்க, இப்படி பணம்  எல்லாம் கேக்க கூடாது என்று சொல்லி அனுப்பியுள்ளார். அந்த ஊழியர் ‘இனி யாரிடமும் டிப்ஸ் கேட்க மாட்டேன் சார்’ என்று சொல்லிவிட்டு கிளம்பி இருக்கார். அதுக்கப்புறம் ஒரு ஆறு மாதம் கழித்து தனது மேனேஜரிடம், அந்த போன் ஆபரேட்டர் தனக்கு 2 பெண் குழந்தை இருக்கு என சொன்னரே அவங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டியிருக்காரு என நெகிழ்ந்து போய் கூறினார் வினோத். தல தலதான்…