“டிராபிக் ராமசாமி” படத்தில் விஜய்சேதுபதி விருந்தாளியாக நடிக்க உள்ளார்.

“டிராபிக் ராமசாமி” படத்தை எஸ்.ஏ.சியிடம் கடந்த 5 ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணியாற்றி அறிமுக இயக்குனர் விக்கி இயக்கி வரும் இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கிறார். அவருடைய மனைவியாக ரோகிணி நடிக்கிறார். இவர்கள் தவிர ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சீமான், குஸ்பு, விஜய் ஆண்டனி இந்த படத்தில் கௌரவ வேடத்தில்  நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடிகர் விஜய்யை அழைத்தபோது அவர் மறுத்துவிட்டாராம். இதனால் விஜய்சேதுபதியை அணுகினார்களாம். இதனால் விஜய்சேதுபதி பணம் வாங்காமல் விருந்தாளியாக நடித்து கொடுக்கிறாராம்.