டீஸரை குறித்து வெங்கட் பிரவுவை திட்டிய பிரபல பாடகர்.

நடிகர் வைபவ் நடிப்பில், வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தயாராகி இருக்கும் படம் “ஆர்.கே.நகர்”. இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி இருக்கிறது தற்போது நன்றாக ஓடினாலும் படக்குழு மேல் ஒரு சிலர் கோபமாக உள்ளனர். இப்படத்தில் வரும் வசனங்கள் தற்போது தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இருக்கிறது. அண்மையில் பாடகர் கிரிஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் டீஸரை பார்த்து, கடைசியாக வந்த வசனம் புரியவில்லை, யாரை குறிவைத்து கூறியிருக்கிறீர்கள் வெங்கட் பிரபு, என் தலைவனை பற்றி இருந்தால் நீ பிரியாணி தான் என டுவிட் செய்துள்ளார். இதற்கு வெங்கட் பிரபு, எதுவாக இருந்தாலும் நேரில் பேசுவோம், படத்தை படமாக பார்க்க வேண்டும் என பதில் கொடுத்துள்ளார்.