டுவிட்டரில் ட்ரெண்ட் ஆன சிம்புவின் AAA

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் இரண்டு பாகங்களில் வெளிவரும் என்றும், சிங்கிள் பாடல் விரைவில் வெளிவருகிறது என்றும், நேற்று வெளியான தகவலால் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆனது.

சிம்புவின் ரசிகர்கள் இதுகுறித்து சுமார் 20 ஹேஷ்டேக்குகள் ஏற்படுத்தி கிட்டத்தட்ட அனைத்தையும் ட்ரெண்டுக்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் இரண்டு பாகமாக வெளிவரவுள்ள 'ஆஆஆ' படத்தின் முதல் பாகம் வரும் ஜூன் 23ஆம் தேதி ரம்ஜான் விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் ஆன்மீகம் கலந்த ஒரு பாடல் இருப்பதாகவும், சிம்புவே எழுதியுள்ள இந்த பாடலின் ஒருசில வரிகளும் நேற்று சமூக வளைதளங்களில் வெளியாகியது. அந்த வரிகள், 'யாருடா நான்னு கேட்பவன் புத்திசாலிடா, நான் யாரு தெரியுமான்னு கேட்பவன் கோமாளிடா' என்று இருந்தது.இந்த​ வரிகளும்  ட்ரெண்ட்டில் கொண்டுவரப்பட்டது.