டுவிட் மூலம் விஜய் தேவர்கொண்டாவிற்கு கதை கிடைத்துவிட்டது – இயக்குனர் மோகன் ராஜா!

மோகன்ராஜா எப்போதும் ஹிட் படங்களை கொடுத்து வருபவர். ரீமேக் படங்களில் இருந்து தனி ஒருவன், வேலைக்காரன் என சொந்த கதையிலும் ஹிட் அடித்தவர். இந்நிலையில் தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா தான் 25 வயதில் இருந்த போது என் பேங்க் அக்கவுண்டில் ரூ 500 தான் இருந்தது, ஆனால், இன்று நான் போர்ப்ஸ் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளேன் என்று கூறியுள்ளார். இதற்கு மோகன் ராஜா ‘சார் எனக்கு சூப்பர் கதை இந்த டுவிட் மூலம் கிடைத்துவிட்டது’ என்று குறும்பாக பதில் டுவிட் கூறி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.