தக்க​ சமயத்தில் வெற்றி மகிழ்ச்சியில் ஏ.எல்.விஜய்

இளைய​ தளபதி விஜய் நடித்த தலைவா படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கிய சைவம், இது என்ன மாயம் படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் தற்போது பிரபுதேவா-தமன்னாவை ஜோடி சேர்த்து மூன்று மொழிகளில் அவர் இயக்கியுள்ள தேவி படம் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் மகிழ்ச்சியில் உள்ளார் ஏ.எல்.விஜய்.இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில், சினிமாவில் வெற்றி, தோல்வி சகஜமான ஒன்றுதான் என்றாலும், தொடர் தோல்விகள் என்கிறபோது.

படைப்பாளிகள் மனதளவில் சோர்ந்து விடுவார்கள். அதோடு எனக்கு சமீபகாலமாக சில பிரச்சினைகள். இருப்பினும், தேவி படத்தை மூன்று மொழிகளில் இயக்கினேன். எனது கவனத்தை சிதற விடாமல் வெற்றிக்காக கடுமையாக உழைத்தேன். அதற்கு பலனாக தேவி படம் மூன்று மொழிகளிலுமே வெற்றி பெற்றிருக்கிறது. எனது வாழ்க்கையில் இப்போது வெற்றி அவசியம் தேவைப்பட்ட ஒரு தருணம் இது. அந்த வெற்றியை தேவி படம் எனக்கு கொடுத்துள்ளது. அதனால் அந்த வெற்றிக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.