தங்க நிற ஆடையில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராய்

72-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டின் ரிவேரியா நகருக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் வந்தார். 45 வயதாகும் இவர் பல ஆண்டுகளாக இத்திரைப்பட விழாவுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த வருடம் கேன்ஸ் விழாவில் பங்கேற்கும் ஐஸ்வர்யா ராய் என்ன ஆடை அணிந்து பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. விழாவுக்கு ஐஸ்வர்யா ராய் தங்க நிற கவுன் உடுத்தி வந்து ரசிகர்களை கவர்ந்தார்.