தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ ஷங்கரின் அன்புப் பரிசு !

தோஹா ஆசிய தடகளப் போட்டியில், தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். அவருக்கு, அன்பளிப்பாக ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாக, நடிகர் ரோபோ ஷங்கர் அறிவித்திருக்கிறார். தேசிய சாதனைக்கு சொந்தக்காரரான இவர், 2.02.70 நிமிடங்களில் இலக்கை எட்டி சாதனை படைத்தார். இவரின்  இந்தச் சாதனையை அரசியல் தலைவர்கள் முதல், சினிமா மற்றும் பல்வேறு துறைசார்ந்த பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், தனது பங்காக நடிகர் ரோபோ சங்கர், தமிழக தடகள வீராங்கனை கோமதிக்கு ஒரு லட்சம் ரூபாய் அன்பளிப்பாகத் தருவதாக அறிவித்துள்ளார்.