தடையை மீறி தயாராகும் ஸ்ரீ தேவியின் வாழ்க்கை படம்!

பிரியா வாரியர், தற்போது இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் தயாராகும் ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் டிரெய்லர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் குளியல் தொட்டியில் உட்கார்ந்து பிரியா வாரியர் அலறும் காட்சி இடம் பெற்றது. குளியல் தொட்டியில் ஒரு பெண் இறந்து கிடப்பதுபோன்று புகைப்படத்தையும் வெளியிட்டனர்.படத்தை மலையாள இயக்குனர் பிரசாந்த் மாம்புலி இயக்கி உள்ளார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் ஸ்ரீதேவி பெயரை பயன்படுத்தக்கூடாது என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். பெயரை மாற்ற முடியாது என்றும் சட்டரீதியாக இதை சந்திப்பேன் என்றும் இயக்குனர் பதில் அளித்தார். இந்த நிலையில் எதிர்ப்பை மீறி ஸ்ரீதேவி பங்களா படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. படத்தில் பிரியா வாரியர், ஆசிம் அலிகான் தோன்றும் மேலும் சில புகைப்படங்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.