தனது முதல் படத்தின் பெயரையே புதிய படத்திற்கு வைத்த விஜய்!

நோட்டா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் விஜய் தேவர்கொண்டா. தற்போது அவர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி' எனும் படம் தமிழில் உருவாகிறது. இப்படம்  தெலுங்கில் சூப்பர் ஹிட்டான துவாரகா படத்தின் தமிழ் ரீமேக் தான். ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் ஏ.என்.பாலாஜி தயாரிக்க, ஸ்ரீனிவாச ரவீந்திரா இயக்குகிறார். விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பூஜா ஜவேரி நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி, ப்ரிதிவிராஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஸ்யாம் கே.நாய்டு ஒளிப்பதிவு செய்ய, சாய்கார்த்திக் இசையமைக்கிறார். இப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் ஏ.என்.பாலாஜி, ” தெலுங்கில் துவாரகா என்ற பெயரில் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற படமே தமிழ் 'அர்ஜுன்ரெட்டி'என்ற பெயரில் தயாரித்துள்ளோம். காதல், ஆக்ஷன், கமர்ஷியல் மூன்று ஒருசேர கலந்த கலவைதான் இந்த 'அர்ஜுன்ரெட்டி'. தெலுங்கு அர்ஜுன் ரெட்டியை போலவே இந்த அர்ஜுன்ரெட்டியும் தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும்” என அவர் கூறினார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகபிரமாண்டமாக நடைபெற உள்ளது.