தனது 20 வயதில் மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் வென்ற சரத்குமார் !

தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னனி நடிகராகவும், அரசியல்வாதியாகவும் சிறந்து விளங்கியவர் சரத்குமார்.இவர் ராமநாதன் மற்றும் புஷ்பலீலா ஆகிய தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் 1954 ஆம் ஆண்டு மகனாக 14-ஆம் தேதி பிறந்தார்.கணிதத்தில் இளங்கலை பட்டப் படிப்பை சென்னையிலுள்ள புதுக்கல்லூரியில் படித்துள்ளார்.சரத்குமார் ஒரு நடிகராகவும், அரசியல்வாதியாகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடிபில்டராக , ஆகவும் இருப்பவர். இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் பல படங்கள் நடித்துள்ளார். இவர் முன்னால் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார். இவர் கலைஞர்கள் அளவிற்கு ஆரோக்கியமாகவும் , உடம்பு கட்டுக்கோட்பாக ஆக காரணம் உடற்பயிற்சி தான். இவர் அந்தக் காலத்திலேயே உடற்பயிற்சிகளை ஒழுங்கான முறையில் மேற்கொண்டு உடல் கட்டுக்கோப்புடனும்,உடல் ஒருங்கிணைப்பாகவும்  வைத்திருந்தவர். அதுமட்டுமில்லாமல் சரத்க்குமார் 1974 ஆம் ஆண்டு அதாவது 20 வயதிலே மிஸ்டர் மெட்ராஸ்(சென்னை ஆணழகன் ) என்ற போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தையும் வென்றார். அந்த காலத்திலேயே ‘மிஸ்டர் மெட்ராஸ்’ பட்டம் வென்றவர்.