Cine Bits
தனது 25 வது படத்தில் இரண்டு நாயகிகளுடன் களம் இறங்கும் ஜெய் !

நீயா 2 படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜெய் தற்போது பிரேக்கிங் நியூஸ் மற்றும் லவ் மேட்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் லவ் மேட்டர் படம் இவரது 25-வது படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி வருகிறார். இதில் ஜெய் ஜோடியாக வைபவி சாண்டில்யா மற்றும் அதுல்யா நடிக்கிறார்கள் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். சந்திரசேகரின் 70-வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் இசையமைக்க, ஜீவன் ஒளிப்பதிவு செய்கிறார்.