தனது 25 வது படத்துக்கு கவுதம் மேனனை தேடிச்சென்று வாய்ப்புக் கேட்ட அருண் விஜய் !

முறை மாப்பிள்ளை’படத்தில் அறிமுகமான அருண் விஜய் இன்று வரை தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் ஒரு இடத்தைப்பிடிக்கவில்லை. கடைசியாக வெளியாகி வெற்றி பெற்ற மகிழ் திருமேனியின் ‘தடம்’ போன்ற வெகு சில படங்களே அவரை தமிழ் சினிமாவில் தக்கவைத்துள்ளன. என்னை அறிந்தால்’ படத்தில் முக்கிய வில்லன் வேடம் கொடுத்த கவுதம் மேனனைத் தேடிப்போய் தனது 25 வது படத்தை இயக்கித் தரும்படி வாய்ப்புக் கேட்டாராம் அருண் விஜய். அதற்கு கவுதம் கிரீன் சிக்னல் காட்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.