தனுசுடன் நடிப்பது மகிழ்ச்சி மஞ்சுவாரியர்!

தனுஷ் நடிக்கும் புதிய படம் ‘அசுரன்’. இந்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்கள் ஏற்கனவே வந்தன. இப்போது 4-வது தடவையாக இணைந்துள்ளனர். வி.கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார். இந்த படத்துக்கான கதாநாயகியாக பலரை பரிசீலித்து இப்போது மஞ்சு வாரியரை தேர்வு செய்துள்ளனர். இவர் தனுஷை விட 5 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த படங்கள் வெற்றிகரமாக ஓடின. இப்போது முதல் தடவையாக அசுரன் படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமாகிறார். மஞ்சு வாரியர் மலையாளத்தில் நடித்து வசூல் குவித்த ‘ஹவ் ஓல்டு ஆர் யு’ படம் தமிழில் ‘36 வயதினிலே’ என்ற பெயரில் ஜோதிகா நடித்து வெளிவந்து வரவேற்பை பெற்றது. மஞ்சு வாரியரும், மலையாள நடிகர் திலீப்பும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அசுரன் படத்தில் தனுஷ் நடிக்கும் தோற்றம் சமீபத்தில் வெளியானது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடக்கிறது. தனுசுடன் அசுரன் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.