தனுஷின் அசுரன் படத்தில் நடிகர் கருணாஸின் மகன் !

வட சென்னையை தொடர்ந்து ’அசுரன்’ படப்பிடிப்பை தொடங்கி உள்ளது தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி. இந்த படத்தில் நாயகியாக மலையாள திரையுலகின் பிரபல நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். அவருக்கு இது முதல் நேரடி தமிழ்ப்படம். முக்கிய கதாபாத்திரத்தில் கருணாசின் மகன் கென் கருணாசை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இவர் ஏற்கனவே அழகு குட்டி செல்லம், நெடுஞ்சாலை படங்களில் நடித்தவர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.